மதுரை வார்டு எண் 17 விஸ்வநாதபுரம் முல்லை மலர் தெருவில் சிலர் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி அதில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வரும் புகையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிப்படைகின்றன. மேலும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும், அவ்வழியே கடந்து செல்பவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மக்களின் நலன்கருதி குப்பைகளை அள்ளவும், குப்பை கொட்டி அதில் தீ வைக்காமலும் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.