குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்

Update: 2026-10-04 17:09 GMT

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் பின்புறம் பல்வேறு தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் உள்ளன. இவ்வாறு பல தரப்பட்ட மக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவ்வப்போது குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை அதிகாரிகள் கருத்தில் கொண்டு அந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்