மதுரை 71-வது வார்டு பொன்மேனி-மாடக்குளம் முக்கிய சாலையில் உள்ள 2-வது மயானம் அருகில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.