திருப்பத்தூர் மாவட்டம் மல்லப்பள்ளி அஞ்சல் சுண்ணாம்புக்குட்டை கிராமத்தில் நெடுஞ்சாலையையொட்டிய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவு பொருட்களை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் கிருமி தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகவன், மல்லப்பள்ளி.