குறிஞ்சிப்பாடி- புவனகிரி செல்லும் வழியில் சாலையோரம் அதிகளவில் ஓட்டல் குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதில் பன்றிகள், நாய்கள் அதிகளவில் மேய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இவை சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகனவிபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.