திருவெண்ணெய்நல்லூர் கல்லுக்கடை முனை அருகே மலட்டாறு பாலத்தின் ஓரம் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.