இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட சேலம் மெயின் ரோடு செல்லும் வழியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரம் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் வந்து விழுகின்றன. பேரூராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை உடனடியாக அள்ள வேண்டும். இந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.