திருப்பூர்-மங்கலம் சாலை பழக்குடோன் பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.