கொங்கணாபுரம்-தாரமங்கலம் சாலையில் பாப்பம்பாடி ஊராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் சரபங்கா ஆறு செல்கிறது. இந்த ஆற்றுப்பாலத்தின் ஓரத்தில் குப்பைகள், பிளாஸ்டிக், கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கோழி கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.