ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?