குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-11-15 12:33 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள சில முக்கிய சாலைகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதில் எழும்  துர்நாற்றத்தால கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த முன் வருமா?

மேலும் செய்திகள்