பவானி பழைய ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள சந்தில் பல நாட்களாக குப்பைகளை அப்புறப்படுத்தாமல் கிடக்கிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இவை அருகே உள்ள வீடுகளுக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.