ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ரசூல்பேட்டை. இந்தப் பகுதி பாணாவரம்-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையைெயாட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அரசு மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. குடியிருப்பு பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வருவதில்லை. இப்பகுதியில் சிலர் குப்பைகளை கொட்ட இடமின்றி, சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், ரசூல்பேட்டை.