ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-10-04 13:58 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாரடி ஏரி நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நீர்த்தேக்கப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் புகைமண்டலம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் குப்பைகள் நீர்நிலையில் கலந்து நீர் மாசடைய வாய்ப்புள்ளது. எனவே ஏரியில் குப்பைகள் கொட்டுவதையும், எரிப்பதையும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்