கடமலைக்குண்டுவில் உள்ள பாலூத்து ஓடை, மூல வைகை ஆற்றில் இறைச்சி, வீட்டு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஓடை, ஆற்றில் கழிவுகளை கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.