பழனி அருகே அ.கலையம்புத்துர் ஊராட்சி ராஜாபுரத்தில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தை ஊராட்சி நிர்வாகத்தினரே குப்பைகள் கொட்டும் கிடங்கு போல் மாற்றிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை மயானத்துக்கு எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மயானத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.