திண்டிவனம் கலைஞர் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.