கோவை வேலாண்டிபாளையம் அருகே மடத்தூர் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இங்கு பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு கழிவுகளை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.