திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் குப்பைகள் மலைபோல சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால், மாணவ-மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.