தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கழிவுகள் சாலையோரம் அவ்வப்போது கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளில் தீயிட்டு கொளுத்துவதால் சாலையில் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பட்டீஸ்வரம்.