குப்பை தொட்டி வைக்கலாமே!

Update: 2026-08-16 13:46 GMT

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சென்னம்பட்டி. இந்த கிராமம் மொரப்பூர் தர்மபுரி மெயின் ரோட்டை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை கொட்ட தொட்டிகள் வைக்கவும், தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை தினமும் அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்