ஏரியில் வீசப்படும் கழிவுகள்

Update: 2026-08-16 19:17 GMT

வந்தவாசி நகராட்சி உட்பட்ட காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் பாதிரி ஏரிக்கரையில் கோழி, ஆட்டிறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டையாகவும், அட்டை பெட்டிகளிலும் கொண்டு வந்து கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் கழிவுகள் ஏரி நீரில் கலப்பதால் மாசுபடுகிறது. அதன் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கு வந்து பார்வையிட்டு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆம்புலன்ஸ்.சுரேஷ், சென்னாவரம்.

மேலும் செய்திகள்