ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் இவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி குழந்தைகள் துர்நாற்றம் காரணமாக அவதி அடைகின்றனர். மேலும் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.