சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.