பாலத்துக்கு அடியில் குப்பைகள் கொட்டும் அவலம்

Update: 2026-08-16 19:39 GMT

சோளிங்கர் பெரியஏரி கடைவாசல் பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பகுதி குப்பைக் கிடங்கு போல் காட்சியளிக்கிறது. அதில் ஈ, புழு, கொசு போன்றவை உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. அத்துடன் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. பாலத்துக்கு அடியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், சோளிங்கர்.

மேலும் செய்திகள்