குப்பை கூடமாக மாறிவரும் ஏரி

Update: 2026-06-28 17:33 GMT
குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள பொட்டவெளி கிராமத்தில் உள்ள ஏரியில் சிலர் குப்பைகள் மற்றும் மருத்துவக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரி தற்போது குப்பை கிடங்காக மாறி வரும் அவல நிலை தொடர்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்