காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதியில் அரசு வழங்கியிருந்த குப்பை தொட்டி தற்போது இல்லை. இதனால் மக்கள் குப்பைகளை சாலையிலேயே வீசுகின்றனர். அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கால்நடைகளும் அதனை சாப்பிடுவதால் அவற்றுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.