சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் சில சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.