நாமக்கல்-திருச்சி மெயின்ரோடு காவேரி நகர் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் அதிக அளவில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். பல நாட்கள் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மேம்பாலத்தின் கீழ் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.