ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-08-09 18:39 GMT

ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் கமண்டல நாகநதியில் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றின் புனிதம் கெடுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது. ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓரிடத்தில் கொண்டு சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து மறு சுழற்சி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க ஒரு இடத்தை நகராட்சி நிர்வாகம் விரைவில் கையகப்படுத்த வேண்டும்.

-சண்முகம், ஆரணி.

மேலும் செய்திகள்