சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிக்கு செல்லும் சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.