டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

Update: 2026-09-20 12:15 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால், அடைபட்டு, சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. எனவே அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்