தஞ்சை மாநகராட்சி 2-வார்டு பழைய திருவையாறு சாலையில் வடிகால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் உள்ள வடிகாலில் குப்பைகள் தேங்கி, மழைநீர் வடிய வழியில்லாம் நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் நீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே , மழைக்காலம் தொடங்கும் முன்பே வடிகாலில் தேங்கிய குப்பைகளை மாநகராட்சியினர் உடனே அகற்றி மழைநீர் சீராக வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2-வது வார்டு பொதுமக்கள், தஞ்சாவூர்.