அலங்கோலமான அமராவதி ஆறு

Update: 2026-09-20 15:07 GMT

ஆறுகளை புனிதமாக கருதுகிறார்கள். அதுவும் அமரவதி ஆறு அமரலோக நதி என்ற பெயர் பெற்றது. இந்த ஆற்றைத்தான் இப்படி அலங்கோலப்படுத்தி, அசுத்தப்படுத்தி வைத்துள்ளார்கள். ஈமச்சடங்கு கழிவுகள், திதி கொடுத்தலின்ேபாது வீணான துணிகள், தோஷ கழிப்பு பூஜை பொருட்கள், காலி மதுபாட்டில்கள் என அத்தனை கழிவுகளையும் கொழுமம் அமராவதி ஆற்றில் போட்டு விடுகிறார்கள். பின்னர் அந்த தண்ணீரைதான் குடிநீராகவும் குடிக்கிறார்கள். இப்படி ஆற்றில் கண்டதை கொண்டுவது தவறு என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.


மேலும் செய்திகள்