ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலைகளில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதியினருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகள் தேங்குவதை தடுக்க வேண்டும்.