குப்பைக்கிடங்காக மாறிய ஊருணி

Update: 2026-09-20 15:29 GMT

நிலக்கோட்டை தாலுகா முத்தாலபுரம் கிழக்கு தெருவில் உள்ள ஊருணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் தேங்கும் குப்பைகளையும் ஊருணியில் தான் கொட்டுகின்றனர். இதனால் குப்பைக்கிடங்கு போல் ஊருணி மாறிவிட்டது. எனவே குப்பைகளை அகற்றி ஊருணியை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்