சாலையோரம் தேங்கியுள்ள குப்பைகள்

Update: 2026-09-20 14:20 GMT

கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், இப்பகுதியில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் குப்பைகள் சிதறிக்கிடப்பதால் பெரும் சிரமம் அடைகின்றனர். மேலும் பொதுமக்களும், விவசாயிகளும் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்