அறச்சலூர் அருகே சில்லாங்காட்டுப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. மதுப்பிரியர்கள் வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கவும், பள்ளி வளாகத்தை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.