நடைபாதையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-09-20 18:42 GMT

போளூர் பஜார் வீதியில் தினமும் மக்கள் செல்கின்ற நடைபாதையோரம் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் கிளறுவதால் நடு தெருவில் குப்பைகள் கிடக்கின்றன. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமர், போளூர்.

மேலும் செய்திகள்