கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேரு நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு குப்பை வண்டி 2 நாட்களுக்கு ஒருமுறை வருவதோடு, மேல்தளத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் சென்றுவிடுவதால் அங்குள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் வேறு வழியின்றி தெருவோரமாக குப்பையை கொட்டிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துப்புரவு பணியாளர்கள் கூடுதல் நேரம் காத்திருந்து அனைத்து தளங்களிலும் குப்பைகளை சேகரித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.