கரூர் வாங்கல் பிரதான சாலையில் அரசு காலனி பகுதியில் குப்பை சேகரிப்பு கிடங்கு மற்றும் சுத்திகரிப்பு மையம் உள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் குடியிருப்புவாசிகளுக்கு புகைமூட்டத்தால் மூச்சுத்திணறலும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் ஏற்படுவதுடன், மழைக்காலங்களில் சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டுவதையும், எரிப்பதையும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.