சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி உலகப்பனூர் பகுதியில் இருந்து மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் மற்றும் அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக செல்லும் பொன்னியாற்று ஓடையில் சீமை கருவேல மரங்கள், முட்செடிகள் முளைத்து காணப்படுகிறது. மேலும் ஓடையில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநீர் அவ்வழியே செல்ல முடியாமல் தேங்கி ஊருக்குள் புகுந்துவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.