கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி இரட்டைபிள்ளையார் கோவில் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. காற்றடிக்கும் நேரங்களில் குப்பைகள் சாலையில் செல்வோர் மீது விழுவதால் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.