திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இதை அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த மைதானத்தில் சமீப காலமாக குப்பைகள் கொட்டப்படுகின்றன. தற்போது இங்கு குவிந்து கிடக்கும் குப்பையை தீவைத்து கொழுத்துகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.