பண்ருட்டி அருகே தொரப்பாடியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அங்கு புகை மூட்டமாக காணப்படுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.