பழனியில், தாராபுரம் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றுவதுடன் அவற்றை கொட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.