ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதில் எழும் துர்நாற்றத்தால் அவ்வழியே செல்லும் பாதசாரிகள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் இந்த குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?