மாற்று இடத்தில் குப்பை கிடங்கு

Update: 2026-08-09 14:19 GMT

பள்ளிபாளையம் அருகே சாணார்பாளையம் சிவன் கோவில் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் அதிக அளவில் குடியிருக்கும் பகுதி ஆகும். அவ்வாறு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் கொசுத்தொல்லை அதிகரித்து, நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சிவன் கோவில் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்று இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்