மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் குப்பை லாரி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும்போது குப்பைகள் ஓட்டை வழியாக சிதறி வருகின்றன. இந்த குப்பை லாரியை மாற்றி விட்டு புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.