குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

Update: 2026-06-21 19:34 GMT

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ். கொல்லை 4-வது தெரு கடைசியில் உள்ள மைதானத்தில் கும்பைகள் கொட்டப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை தீ வைத்து எரிக்கின்றனர். அந்தக் குப்பைகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் பொருட்களும் எரிக்கப்படுவதால் சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. நகராட்சி ஊழியர்கள் குப்பைகள் கொட்டுவதையும், தீ வைப்பதையும் தடை செய்து குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆம்பூர். 

மேலும் செய்திகள்